மிட்டாய் கவிதைகள்!

2011, டிசம்பர் 31

August 12, 2012

2011

புத்தாண்டு வாழ்த்து, பூத்தவுடனே சொல்ல
பனிரெண்டைக் கண்ணி மைக்காமல் காணவே
சொக்கிய கண்களுக்கு சோறு போட
கொஞ்சம் பின்னோக்கி நடக்கப் போகிறேன்,

‘தானே’ வந்து தாறுமாறாய்த் தாக்கி
தன்தாகம் தீர்த்துச் செல்லும் முன்னர்,
‘விரு’ களம் கண்டு விறுவிறுவென
இரட்டை விருந்து அழித்த நினைவு,

அண்டை மாநில அணைப் பிரச்சனையும்
தன்சொந்த அணு உலைப் பிரச்சனையும்
ஆண்டின் அழியாச் சுவடான துயரம்,

நம்மவர் வென்ற கபடிக் கோப்பையைக்
எழுநூறு கோடி யாரெனத் தேடி,
முறுக்கிப் பிடித்த ஃபார்முலா ஒன்றுடன்,
மக்கள் தொகை கணக்கெடுத்து மறந்தோம்,

ஆப்பிள் தந்த ஜாப்சை இழந்தோம்,
ஆன்மிகம் சொன்ன சாய்பாபாவை இழந்தோம்,
அச்சுறுத்திய பின்லேடன் எப்படியோ இழந்தோம்,
ஆட்சிமாறி பொருள் வாங்கும்ஆசை இழந்தோம்,

இந்திய அணியின் வெற்றிக் கோப்பை
சென்னை அணியின் இரண்டாம் வெற்றி
பத்மநாத சாமி கோவில் சொத்து
இதையெல்லாம் விழுங்கும் திமிங்கல 2ஜி,

இத்தனைக்கும் இடையே அவ்வப்போது ஒருவர்
“ஊழலற்ற இந்தியா” என்ற விதை விதைக்க,
வெகுண்டு பின்தொடர்ந்து பெற்ற வெற்றி,

பின்னோக்கிய பயணம் சென்றஆண்டு நான்சொன்ன
“இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2011” என்ற
பதாகையோடு இனிதே முடிவடைகிறது!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்